கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது தெய்வீக மொழி. அந்தவகையிலே எமது வட்டுவால் கிராம மக்களும் கோபுர தரிசனம் பெறும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இன்று வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தில் இராஜ கோபுரத்துக்கான அத்திவாரம் அமைக்கும் பணி ஆகம விதிப்படி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதான குருக்களாக இரா பத்மநாதக் குருக்களும், (ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம்) க.இரகுநாதக் குருக்களும் (முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயம்) ஆகியோரும் ஆகமவிதிப்படி யாகம் வளர்த்துச் சிறப்பு பூசையினை மேற்கொண்டிருந்தார்கள். இவர்களுடன் எமது ஆலய நிரந்தரக் குருவான பகீரதக் குருக்களும் செயற்பட்டு அடிக்கல் நாட்டு விழாவை நிறைவேற்றினார்கள்.
இந் நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்களான திரு ரவிகரன், திரு சிவநேசன் , கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் திரு குணபாலன், வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்து உரையாற்றினார்கள். இலங்கையில் சப்தகன்னிமார் கோயிலுக்கு கோபுரம் அமைக்கப்படுவது முதலாவதாக எமது ஆலயத்திலேயே என்ற பெருமையை எம் கிராமமும் எமது ஆலயமும் பெறுகின்றது. இச் சிறப்பை ஏற்படுத்தித் தந்த எம் கிராம வாழ் உறவுகளான
திரு. நடராஜமூர்த்தி நாகேஸ்வரி ,
திரு. பிரபாகரன்
குடும்பத்தாருக்கு வட்டுவாகல்.கொம் சார்பாகவும் வட்டுவாகல் கிராம மக்கள் சார்பாகவும், கன்னிமார் பக்த அடியார்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதில் மனமகிழ்வடைகின்றோம்.
இராஜகோபுரப் பணிகள் இனிதே நிறைவடைய நல் வாழ்த்துக்கள்.