Test Footer 2

Ads

விளையாட்டுச் செய்திகள்


உலகக் கோப்பை கிரிக்கெட்:முதற்சுற்றில் அணிகளின் புள்ளி விபரங்கள்
குழு A
நாடுகள்போட்டிகள்வெற்றிதோல்விசமம்நி/சபுள்ளிகள்நிகர ஓ.வி

நியூசிலாந்து431006+1.848

இலங்கை431015+0.760

பாகிஸ்தான்431006+2.663

அவுஸ்ரேலியா320015+1.813

ஸிம்பாவே312002+0.079

கனடா413002-2.083

கென்யா404000-3.403



குழு B
நாடுகள்போட்டிகள்வெற்றிதோல்விசமம்நி/சபுள்ளிகள்நிகர ஓ.வி

இங்கிலாந்து421105+0.054

இந்தியா430107+0.992

நெதர்லாந்து404000-2.728

பங்களாதேசம்312002-1.764

தென்ஆபிரிக்கா321004+1.754

மே.இ.தீவுகள்321004+2.667

அயர்லாந்து312002-0.296


உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக ரன்கள் குவித்தவர்கள்
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 33 ஆட்டங்களில் விளையாடி 1,732 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர் 4 சதங்கள், 12 அரைசதங்களுடன் இந்த ரன்னை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 152 ரன்கள் எடுத்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் ஜாவித் மியான் தத் 33 ஆட்டங்களில் 1 சதம், 8 அரைசதங்களுடன் 1,083 ரன்கள் எடுத்துள்ளார். இவர் அதிகபட்சமாக 103 ரன்கள் எடுத்துள்ளார்.
இலங்கையின் அரவிந்த டி சில்வா 35 ஆட்டங்களில் விளையாடி 1,064 ரன்கள் குவித்து 3-வது இடத்தில் உள்ளார். இவர் 2 சதம், 6 அரைசதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 145 ரன்கள் எடுத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் 1,013 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். அவர் 23 ஆட்டங்களில் 3 சதம், 5 அரைசதங்களுடன் இந்த ரன்னை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 181 ரன்கள் எடுத்துள்ளார்.
5-வது இடத்தில் அவுஸ்திரேலியாவின் மார்க் வாஹ் உள்ளார். அவர் 22 ஆட்டங்களில் 4 சதம், 4 அரைசதங்களுடன் 1,004 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 130 ரன்கள் எடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 28 ஆட்டங்களில் 3 சதம், 2 அரைசதங்களுடன் 998 ரன்கள் குவித்து 6-வது இடத்தில் உள்ளார். இவர் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் எடுத்துள்ளார். இது 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அடிக்கப்பட்டதாகும்.
7-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ் உள்ளார். 33 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் 1 சதம், 6 அரைசதங்களுடன் 978 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 120 ரன்கள் எடுத்துள்ளார்.
இலங்கை வீரர் அர்ஜுன ரணதுங்கா 969 ரன்கள் குவித்து 8-வது இடத்தில் உள்ளார். 30 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 7 அரைசதங்களுடன் இந்த ரன்னை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்துள்ளார்.
9-வது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிரையன் லாரா உள்ளார். 25 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 2 சதம், 6 அரைசதங்களுடன் 956 ரன்கள் குவித்துள்ளார். இவர் அதிகபட்சமாக 116 ரன்கள் எடுத்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 915 ரன்களுடன் 10-வது இடத்தில் உள்ளார். 21 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 3 சதம், 3 அரைசதங்களுடன் இந்த ரன்னை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் எடுத்துள்ளார்.


உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்
உலகக் கோப்பை போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத் முதலிடத்தில் உள்ளார். 4 உலகக் கோப்பையில் 39 ஆட்டங்களில் விளையாடி 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
15 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.
இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 55 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 5 உலகக் கோப்பையில் 38 ஆட்டங்களின் விளையாடியுள்ளார். 28 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும். 4 உலகக் கோப்பையில் 31 ஆட்டங்களில் விளையாடியுள்ள இலங்கையின் முத்தையா முரளிதரன் 53 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். 19 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.
இலங்கையின் சமிந்தா வாஸ் 49 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். 4 உலகக் கோப்பையில் 31 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 25 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறப்பான பந்துவீச்சு ஆகும். இந்தியாவின் ஜவஹல் ஸ்ரீநாத், 4 உலகக் கோப்பையில் 34 ஆட்டங்களில் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தி 5-வது இடத்தில் உள்ளார். 30 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.
தென்னாப்பிரிக்காவின் ஆலன் டொனால்டு 4 உலகக் கோப்பையில் 25 ஆட்டங்களில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி 6-வது இடத்தில் உள்ளார். 17 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.
அவுஸ்திரேலியாவின் பிராட் ஹாக் 34 விக்கெட்டுகளை வீழ்த்தி 7-வது இடத்தில் உள்ளார். இரண்டு உலகக் கோப்பையில் 21 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 27 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.
பாகிஸ்தான் வீரர் இம்ரான்கான் 5 உலகக் கோப்பையில் 28 ஆட்டங்களில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தி 8-வது இடத்தில் உள்ளார். 37 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும். இரண்டு உலகக் கோப்பையில் மட்டுமே விளையாடியுள்ள அவுஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 17 ஆட்டங்களில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி 9-வது இடத்தில் உள்ளார். 29 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.
3 உலகக் கோப்பையில் விளையாடியுள்ள நியூசிலாந்தின் கிறிஸ் ஹாரிஸ் 28 ஆட்டங்களில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி 10-வது இடத்தில் உள்ளார். 7 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.



உலக கிண்ண கிரிக்கெட் : சாதித்த பந்துவீச்சாளர்கள்
1975-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை தொடரில் அவுஸ்திரேலியாவின் கேரி கில்மோர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
1979-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து வீரர்மைக் ஹென்றிக் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை எட்டினார்.
1983-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியாவின் ரோஜர் பின்னி 8 ஆட்டங்களில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த முறை உலகக் கோப்பையையும் இந்தியா கைப்பற்றியது.
1987-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அவுஸ்திரேலிய வீரர் கிரேக் மெக்டெர்மோட் அதிகபட்சமாக 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் 8 ஆட்டங்களில் விளையாடி இந்த சாதனையை எட்டினார்.
1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் 10 ஆட்டங்களில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய வீரர் அனில் கும்ப்ளே 7 ஆட்டங்களில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை எட்டினார்.
1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் ஜெப் அலாட், அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே ஆகியோர் தலா 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெப் அலாட் 9 ஆட்டங்களிலும், வார்னே 10 ஆட்டங்களிலும் விளையாடி இந்த விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கை வீரர் சமிந்தா வாஸ் 10 ஆட்டங்களில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை எட்டினார். இந்த உலகக் கோப்பையில் வாஸ் ஹாட்ரிக் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அவுஸ்திரேலிய வீரர் கிளன் மெக்ராத்11 ஆட்டங்களில் விளையாடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை எட்டினார். இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைகளில் மெக்ராத் வீழ்த்திய 26 விக்கெட்டுகளே தனிப்பட்ட ஒரு வீரர் உலகக் கோப்பையில் நிகழ்த்திய அதிகபட்ச விக்கெட் சாதனையாகும்


உலகக் கோப்பை கிரிக்கெட்: ஓர் ஆட்டத்தில் அதிக ரன் குவித்தவர்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஓர் ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் தென்னாப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் முதலிடத்தில் உள்ளார்.

1996-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல்கிர்ஸ்டன் 188 ரன்கள் குவித்ததே இன்றளவும் உலகக் கோப்பையின் ஓர் ஆட்டத்தில் ஓர் வீரர் எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.
அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சௌரவ் கங்குலி 183 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்த ரன்னை எடுத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 181 ரன்கள் குவித்து 3-வது இடத்தில் உள்ளார். அவர் 1987-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்த ரன்னை எடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தந்து பெருமை சேர்த்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 4-வது இடத்தில் உள்ளார். அவர் 1983-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்துள்ளார்.
5-வது இடத்தில் ஜிம்பாப்வே வீரர் கிரேக் விஷார்ட் உள்ளார். அவர் 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 172 ரன்கள் குவித்துள்ளார்.
நியூசிலாந்து வீரர் கிளன் டர்னர் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவித்து 6-வது இடத்தில் உள்ளார். அவர் 1975-ம் ஆண்டு உலகக் கோப்பையில் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த ரன்னை எடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர் ஆண்ட்ரூ ஹட்சன் 1996-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 161 ரன்கள் குவித்து 7-வது இடத்தில் உள்ளார்.
2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 160 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் இம்ரான் நசீர் 8-வது இடத்தில் உள்ளார்.
அவுஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேடன் 158 ரன்கள் குவித்து 9-வது இடத்தில் உள்ளார். அவர் 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இந்த ரன்னை எடுத்துள்ளார்.
இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 152 ரன்கள் குவித்து 10-வது இடத்தில் உள்ளார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்த ரன்னை எடுத்துள்ளார்.

தென் ஆபிரிக்காவை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது இந்தியா
[ புதன்கிழமை, 29 டிசெம்பர் 2010, 01:19.41 பி.ப GMT ]

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 87 ரன்னில் அபார வெற்றி.
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட்டில் முதலில் ஆடிய இந்திய அணி 205 ரன்களும், பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 131 ரனகளில் ஆட்டம் இழந்தது. இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தென்னாப்பிரிக்கா அணி 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 111 ரன்களுக்கு 3விக்கெட்டுகளை இழந்தது. இன்று விளையாடிய ஆரம்பம் முதலே தடுமாறி வந்த தென்னாப்பிரிக்கா 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. 
ஆட்டநாயகனாக வி.வி.எஸ்.லட்சுமண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகக் கிண்ண கிரிக்கெட்:

மேற்கிந்திய தீவுகள் அணியில் டெய்லர் நீக்கம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஜொரோம் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பெப்ரவரி 19- ஆம் திகதி முதல் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை இலங்கை, இந்தியா, பங்காளதேஷ், ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கான 30 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீரர்கள் எட்வர்ட்ஸ், ஜெரோம் டெய்லர் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை






அவுஸ்திரேலியாவின் மோசமான சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 28 டிசெம்பர் 2010, 06:09.12 மு.ப GMT ]

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில் 98 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இது அவுஸ்திரேலிய அணியின் வரலாற்றில் சில மோசமான சாதனைகளுக்கு வழிவகுத்துள்ளது.


"மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணி எடுத்த (98 ஓட்டம்) 2 ஆவது குறைந்தபட்ச ஓட்டம் இதுவாகும். இதற்கு முன்பு 1981 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 83 ஓட்டங்களுக்கு சுருண்டது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் அவுஸ்திரேலிய அணி எடுத்த குறைந்தபட்ச ஓட்டமும் இதுவாகும். 1968 இக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த குறைந்தபட்ச ஓட்டம் இதுதான். 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணி உள்ளூரில் 120 ஓட்டங்களுக்கும் குறைவான ஓட்டத்தில் ஆட்டமிழந்தது 4 ஆவது முறையாகும்.
இந்த மைதானத்தில் முதல் இனிங்ஸில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஓட்டம் இது (98) தான்.
முதல் இனிங்ஸில் அவுஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் "கேட்ச்' கொடுத்து ஆட்டமிழந்தனர். இதேபோல் டெஸ்டில் எல்லா துடுப்பாட்ட வீரர்களும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழப்பு 48 முறையாகும். விக்கெட் காப்பாளர் மேட் பிரையன் 6 கேட்ச் பிடித்தார். அவர் ஒரு கேட்ச்சில் சாதனையை சமன் செய்யத் தவறினார்.
இங்கிலாந்து அணிக் கப்டன் ஸ்டிராஸ் நேற்று முன்தினம் 6000 ஓட்டங்களை கடந்தார். இதன் மூலம் அவர் டெஸ்டில் 6 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 52 ஆவது வீரர் என்ற பெருமையை வென்றார். ஸ்டிராஸ், குக் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு நேற்று முன்தினம் 10 ஆவது முறையாக செஞ்சரி ஓட்டத்தைக் கடந்தனர். இதன் மூலம் தொடக்க விக்கெட்டுக்கு அதிக செஞ்சரி ஓட்டத்தைக் கடந்த இணைகள் பட்டியலில் 4 ஆவது இடத்தைப் பெற்றனர்.