வட்டுவாகல் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ நிகழ்வு வருடந்தோறும் ஆனிமாதத்தில் ஏழுநாட்கள் இடம்பெற்று பௌர்ணமித் திங்கள் அன்று நிறைவடையும். அதனடிப்படையில் இந்த வருடத்துக்கான பொங்கல் நிகழ்வுகள் கடந்த திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏழு நாட்களும் உப்புநீரில் விளக்கேற்றப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
ஆகமம் சாரா வழியில் இடம் பெறும் நிகழ்வுகளில் தீர்த்தமெடுத்தல், பண்டமெடுத்தல், தூளிபிடித்தல் போன்ற பல பாரம்பரிய வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படும். பூசை வழியாடுகளின் இறுதியில் பிரசாதம் வழங்கலுடன் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் விழா உபயகாரர்களுடன் இணைந்து ஆலய பரிபாலன சபையினரால் மேற்கொள்ளப்படும்.
எமது கிராமத்தைச் சார்ந்த மக்கள் மாத்திரமன்றி முல்லைத்தீவு நகரைச்சுற்றியுள்ள பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து அம்மனின் அருளைப் பெறுவதுடன் அன்னதான நிகழ்விலும் பங்குபற்றிச் செல்கின்றமை சிறப்பம்சமாகும்.
ஐந்தாம் நாளாகிய இன்று பிரதம பூசாரியினால் தூளிபிடித்து ஆடல் இடம் பெற்றது. அதன்பொழுது இடம்பெற்ற வீடியோ பதிவு இங்கே இணைக்கப்படுகிறது.
நன்றிகள்
படங்கள் வீடியோ
ஜெ.யுகிந்தன்
வட்டுவாகல்