மு/வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை
GTMS School Vadduvakal Mullaitivu
எமது கிராமத்தின் பாடசாலையின் பெயர் மு/வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகும். இது ஆரம்பக் கல்விக்கு உகந்த பாடசாலையாக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இங்கே தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரையான மாணவர்வளுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. எமது பாடசாலை முல்லை மாவட்டத்தின் மிகவும் பழைய பாடசாலைகளில் ஒன்றாகும். இது 1917ம் ஆண்டு கட்டப்பட்டதாக பாடசாலைப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. வருகின்ற வருடம் எமது பாடசாலை நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடத் தயாராகி வருகின்றது.