யுத்தம் முடிவுற்றபின் வட்டுவாகலில் மக்களை மீள குடியமர்த்தப்டுவதற்கு முன்னர் ¸ இராணுவத்தினரால் வட்டுவாகலில் புத்த விகாரை கடற்கரையின் அருகே சப்த கன்னிமார் ஆலய வளாக கிரியைகள் செய்யும் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது. எந்தவித சிங்களப் பௌத்த தொடர்புமற்ற பிரதேசத்தில் விகாரை தேவையற்றது என்பது பல முறை வட்டுவாகல் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்குப் பின்னால் பேரினவாதத்தின் தமிழர் நில அபகரிப்பு இருப்பது தெளிவாகின்றது. அதைவிட தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சாரத்தை இல்லாமல் ஒழிக்கும் அல்லது வட்டுவாகல் மக்களின் தனித்துவத்தைச் சிதைத்து கலப்புக் கலாச்சர முறையை ஏற்படுத்தவே பேரினவாதிகளின் முனைப்பாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது. வட்டுவாகல் மக்களின் இக் கோரிக்கையினை நல்லாட்சி அரசும் அரசியல்வாதிகளும்¸ அரச அதிகாரிகளும் செவி சாய்ப்பார்களா?