வட்டுவாகல் பாலத்தில் உழவு இயந்திரம் ஒன்றை, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கடந்து செல்ல முயற்சித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டர் சைக்கிளில் வந்த நபர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு ஆனந்த புரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான திரு சதீஸ் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
விபத்துக்கான காரணம் அதிகமான வேகத்தால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தமையே எனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.நாளுக்கு நாள் வடபகுதியில் விசேடமாக மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகின்றமை வருந்தத்தக்கது. இவ்விடயத்தில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.