இருபது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவிற்குமான புதிய நேரடி பஸ் சேவை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து சபையின் வட மாகாண பிராந்திய முகாமையாளர் கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் 1990 காலப்பகுதியில் இருந்த பஸ் டிப்போவானது யுத்த சூழ் நிலை காரணமாக சேதமாக்கப்பட்டது. எனினும் தற்போது புதிய பஸ் நிலைய தரிப்பிடம் அமைக்கப்பட்டு எதிர்வரும் திங்கட் கிழமை முதல் யாழ்ப்பாணம் - முல்லைத்தீவிற்கான நேரடி பஸ் சேவையில் ஈடுபடும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை பருத்தித்துறைக்கும் - கொழும்பிற்குமான நேரடி பஸ் சேவையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
பருத்தித்துறைக்கும் கொழும்பிற்குமான பஸ் சேவையினை அரசாங்க உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு படையினருமே அதிகளவில் பயன்படுத்துவதால் சேவை பகல் வேளையில் இடம்பெறுவதால் போக்குவரத்து செய்யும் மக்களது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே மக்களின் வேண்டு கோளுக்கிணங்கவே சேவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக கணேச பிள்ளை மேலும் தெரிவித்தார்.