முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் உதவி அரசாங்க செயலக பிரிவிற்குட்பட்ட இடம் பெயர்ந்த மக்களை முறிகண்டி கிராமத்திற்கு மீள குடியேற்றம் செய்வதற்காக வவுனியா மெனிக் பாம் முகாம் தொகுதியிலிருந்து அழைத்துச்செல்லப்படுவதாக அறியக்கிடைக்கிறது. முல்லைத்தீவு மாவட்ட செயலர் திரு நாகலிங்கம் வேதநாயகம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த ஒரு தொகுதியிரே குடியமர்த்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்னும் முல்லைத்தீவை சேர்ந்த 18000 பேர் வவுனியாவில் தங்கவைத்திருப்பதாவும் தெரிவித்துள்ளர்.
மேலதிகமாக மழையால் 1120 குடும்பங்களைச் சேர்ந்த 3187 பேர் முல்லைத்தீவில் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.