தமிழர்கள் நீதி கேட்ட எந்தச் சந்தர்ப்பத்திலும் சீர்தூக்கிப் பார்க்காமல் எதற்கெடுத்தாலும் தமிழ்மக்கள் மீது கடும் போக்கை கொண்டிருந்தது ஜே.வி.பி. தமிழர் போராட்டத்தை பயங்கரவாதமாக காட்டி, தமிழ் மக்களுக்கெதிரான பல சட்டங்களை இயற்றுவதற்கும் (பயங்கரவாத சட்டம் உட்பட), உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்து வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்த கொடுமையை செய்தவர்களும் ஜே.வி.பி யினரே. இன்னும் எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் இன்று எங்கிருந்து பாசம் வந்ததோ தெரியவில்லை தமிழர்களின் துயரைப்போக்க எத்தனிப்பவர்கள் போல பாசாங்கு செய்கிறார்கள் இக் கயவர்கள்.யாழ்ப்பாணத்தில் நாம் இலங்கையர் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பேரூந்து தரிப்பிடத்தில் 15..11.2010 பிற்பகல் ஒரு மணியளவில் காணாமல் போனோர் மற்றும் கைதுசெய்யப்பட்டோரின் விபரங்களை வெளியிடக்கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது. இதில் அழையா விருந்தாளியாக கலந்து கொண்ட ஜே.வி.பி கண்ணீருடன் கதிகலங்கி நின்ற மக்களுக்கு முன்னால் ஒரு "வீதி நாடகத்தை" அரங்கேற்றியது. தாங்கள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வைபெற்றுத்தருபவர்கள் போல காண்பித்து அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டனர்.
உண்மையில் தமிழ்மக்கள் எதிர் நோக்கும் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணகர்த்தாக்கள் இவர்களே. அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்ட காலத்தில் என்ன ஆட்டம் எல்லாம் ஆடிய இவர்கள், யாரை தூக்கி மிதித்து துவம்சம் செய்தார்களோ இன்று அந்த மக்கள் முன்னால் தங்கள் அரசியலை நடத்த வேண்டிய கேவலமான நிலைக்கு வந்ததுதான் வேதனை. "எல்லாம் அவன் செயல்" என்பது இதுதான் போலும்.
தென்னிலங்கையில் அரசியல் நடாத்த வக்கணையற்ற நிலையில் யாழ்ப்பாணம் வந்த இப்போக்கிரிகளின் அரசியல் உள்நோக்கத்தை தமிழ் மக்கள் நாம் புரிந்துகொள்ளவேண்டும். வந்தான் வரத்தான் எல்லாருக்கும் யாழ்ப்பாணம் என்ன மாமா வீட்டுச் சொத்தா? யார் குற்றி எண்டாலும் அரிசியாக வேண்டும்". ஆனால் அரிசி வராதுவிட்டால்??. கதிகலங்கி நிற்கும் மக்களுக்கு யார் மூலமாகவேனும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக ஜே.வி.பி யினரின் கால்களுக்கு செல்ல என்ன தேவை இருக்கிறது. பாதிக்கப்பட்ட எம்மை இன்னும் எத்தனை பேர் கூறுபோடப் போகிறார்ளோ?
ஜே.வி.பியினரின் இந்த உள்நோக்கத்தை புரிந்து கொண்ட அரசாங்கத் தரப்பினர் தங்கள் கைவரிசையை மீண்டும் காட்டி நல்ல பாடம் புகட்டியுள்ளனர். இச்செயறபாடு உண்மையில் தமிழ் மக்களாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் இந்தக் கோடாலிக்காம்புகளினால் இன்னுமொரு அரசியல் நாடகத்தை யாழில் நடாத்த முடியாது போயிருந்திருக்கும். இன்னுமொரு ஏற்பாடு அங்கு ஜே.வி.பி யினரால் ஏற்படுத்தப்பட்டால் தமிழ் மக்களே நல்லபாடம் புகட்ட வேண்டும். மொத்தத்தில் அடிவாங்க வேண்டியவர்கள் அடிவாங்கிவிட்டார்கள். அது இராமன் அடித்தாலென்ன, இராவணன் உதைத்தால் நமக்கென்ன.