இலங்கையில் விடுதலைப் புலிகளின் கோட்டையாக இருந்த முல்லைத்தீவு காடுகள், விலங்குகள் சரணாலயமாக மாற்றப்பட உள்ளது. விடுதலைப் புலிகள் தீவிரமாக செயல்பட்ட காலத்தில், அடர்ந்த காடுகள் கொண்ட முல்லைத் தீவு பகுதி, அவர்களின் கோட்டையாக இருந்தது. ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட இந்த காட்டில் ஏராளமான யானைகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் இந்த காட்டில் ஆயிரத்து 464 யானைகளும், 672 நபர்களும் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதால், தற்போது இந்த காடு அமைதியாக காணப்படுகிறது. எனவே, முல்லைத் தீவை விலங்குகள் சரணாலயமாக மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டு வனத்துறை அமைச்சர் சந்திரசேனா தெரிவித்துள்ளார்.