வவுனியாவில் கோவில்குளம் சிவன் முதியோர் இல்லத்தில் 01.10.2010 முதியொர் தினம் அன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்டு அநாதரவான முதியவர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து அநாதரவான முதியவர்கள் சுமார் 260க்கு மேற்பட்டவர்கள் இங்கே பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த முதியவர்கள் மிகவும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றமை அனைவராலும் பாராட்டப்பட வேண்டியது. நேரடியாக சென்று பார்வையிட்டால் இந்த உண்மையைப் பார்வையிடலாம்.
இந்த முதியோர் இல்லமானது வசதிகளற்ற நிலையில் இயங்கி வருகின்றமை மிக வேதனைக்குரியது. இவ் முதியோர் இல்லத்தை சிறப்பாக பராமரித்து வரும் திரு.செல்வராஜா கருத்துத் தெரிவிக்கையில் நல்லுள்ளம் படைத்த உள்ளங்களிலிலுந்தும் நல்நோக்கு அரச சார்பு, சார்பற்ற நிறுவனங்களிலிருந்து உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
நல்லுள்ளம் படைத்தவர்களே தயவுடன் கீழ் காணும் விபரங்களுடன் தொடர்புகொண்டு உதவுங்கள்.
முகவரி.
சிவன் முதியோர் இல்லம்,
கோவில் குளம்,
வவுனியா,
இலங்கை.
தொலைபேசி 0094245100016