நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை இறுதியாக இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டு மாதங்களாக இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவானது தற்போது அதன் இறுதி அறிக்கையை தயாரித்து முடித்து சற்றுமுன்னர் சமர்ப்பித்துள்ளது.
இதில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார். மூவர் அடங்கிய இந்த நிபுணர்கள் குழுவினரின் விசாரணை அறிக்கை இன்றைய தினம் பான் கீ மூனிடம் இதை ஒப்படைத்துள்ளது எவ்வாறெனினும் இதன் ஒரு பிரதியை அவர் மகிந்த ராஜபக்ஷவுடன் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார், இந்த அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்த மாட்டாது என சுட்டிக்காட்டப்படுகிறது.
நிபுணர்கள் குழு, கடந்த வருடம் மே மாதம் நியமிக்கப்பட்டது. இந்த குழுவில், இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி தருஸ்மன், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூகா, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.