இலங்கை அரசு லண்டன் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தஞ்சமளிக்க தயார் என்று அறிவித்துள்ளது. அதாவது யாராவது பாதிக்கப்பட்டு அகதி அந்தஸ்து கோர விரும்பினால் தாம் அதற்கான கதவுகளை திறந்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது லண்டனில் அண்மையில் நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டோர், பாதிக்கப்பட் பகுதிகளில் இனி வாழ முடியாது என்று கருதுபவர்கள் நேரடியாக தமது நாட்டுக்கு வந்து அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்தால் தாம் உடனடியாக அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதாக அறிவித்துள்ளது.
இவ்வறிவித்தல் மூலம் பிரித்தானிய அரசுக்கு மறைமுகமாக பல செய்திகளை சொல்லியிருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கலகத்தை அடக்கத் தவறியதாக இலங்கை தெரிவித்த கருத்தில் பிரித்தானிய அரசு அதிர்ச்சியிலும், கடுப்பிலும் இருக்கிறமை யாவரும் அறிந்ததே.
சிலவேளைகளில் கோபம் வந்தாலும், பலவேளைகளில் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியாத உணர்வு! இலங்கையின் கருத்து காமெடிதான் கொஞ்சம் ரிலாக்சாவும் இருக்க வைக்குது!