சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மர்ம மனிதன் பற்றிய முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது உண்மையா?
ஆம் இது உண்மைதான் என்பதனை நிரூபிக்கும் வகையில் மர்ம மனிதர்கள், பாதுகாப்புபடையின் நடவடிக்கைகள்,பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகள் என்பன காணப்படுகின்றன.
இவ்விடயம் பற்றி சற்று ஆழமாக உற்றுநோக்குவோம்.
மக்களிடையே பல்வேறுபட்ட கருத்துக்கள், சந்தேகங்கள் உருவாகியுள்ளன.
• மகிந்த ராசபக்சவுக்கு விசித்திர வியாதி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான பரிகாரத்திற்காகவேண்டி மூவாயிரம் பெண்களின் இரத்தம்தேவை என சாத்திரிகர் கூறியுள்ளதால் தேசிய ரீதியில் இரத்தம் பெறும் நடவடிக்கை இது என்றும்
• புதையல் ஒன்று பழங்கால மன்னர்கள் ஆட்சிபுரிந்த இடமொன்றில் காணப்படுவதாகவும் அப்புதையலை எடுக்க ஆயிரம் பெண்களைபலிகொடுக்க வேண்டும் என்பதால் இவ்வாறு நாடளாவிய ரீதியில் பெண்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும்
• பொதுமக்களை சீண்டுவதால் சீற்றமுற்று மக்கள் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களை வெளியில் கொண்டுவருகிரார்களா,ஆயுதங்கள் உள்ளனவா என்பதனை உளவு பார்பதற்காக பயன்படுத்தப்படும் யுக்தி எனவும்-
• புராதன மன்னன் ஒருவனின் வாள் குகை ஒன்றில் இருப்பதாகவும் அதனை கண்டறிந்தால் நீண்ட காலம் ஆட்சிபீடத்தில் இருக்கலாம்என்றும் அந்த வாளினை எடுக்க ஆயிரம் பெண்களை பலிகொடுக்க வேண்டும் என்பதால் இவ்வாறு நாடளாவிய ரீதியில் பெண்கள்தாக்கப்படுகிறார்கள் என்றும்
பலவிதமான வதந்திகள் பரவவிடப்பட்டுள்ளன.
இவைகள் ஒப்பான கருத்துக்கள் அல்ல. ஏனெனில் பலிகொடுப்பது நாம் அறிந்தவரை உரிய இடத்தில் குறிப்பிட்ட நபரினால்நிறைவேற்றப்பட வேண்டும். தனித்தனியே ஆயிரம் அல்லது மூவாயிரம் பெண்களின் இரத்தம் தேவை என வைத்துக்கொண்டாலும்அதனை இலகுவாக பணத்தினை கொடுத்து வாங்குவது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றும் பாரிய விடயமல்ல.
பாடசாலை பேரூந்துகள் கடத்தப்பட்டு பல நூற்றுக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டது நாம் அறிந்த விடயம். இவ்வாறு பலிகொடுப்பதற்கு உயிர்கள் தேவையெனில் அது இலகுவாக நடந்து முடிந்திருக்க வேண்டும்,
ஏனெனில் மனிதர்களை கொல்லுவதொண்றும் நம் நாட்டில் பெரியவிடயமல்ல. இவைகளை நடந்து முடிந்த மர்ம மனிதனின்செயற்பாடுகளுடன் ஒப்பிடுவோம். சம்மாந்துறை, இறக்காமம், வரிப்பதான்சேனை, பொத்துவில், கல்முனை, ஓட்டமாவடி,வாழைச்சேனை, நாவற்குடா, மலையகம் இவ்வாறு பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன.
இவ்வனைத்து ஊர்களிலும் நடந்து முடிந்த மர்ம மனித வேட்டைகளில் பின்வரும் விடயங்களை அவதானிக்கக்கூடியதாயுள்ளது.
• மக்களால் வர்ணிக்கப்படும் மர்ம மனிதர்களால் எவருக்கும் பாரதூரமான எந்த பாதிப்புக்களும் நடந்ததில்லை.
• மக்களால் பிடிக்கப்பட்ட மர்ம மனிதர்கள் என வர்ணிக்கப்படும் நபர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினை சேர்ந்தவர்கள்.
• மக்களால் பிடிக்கப்பட்ட மர்ம மனிதர்கள் என வர்ணிக்கப்படும் நபர்கள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் பாதுகாத்து விடுதலைசெய்துள்ளனர்.
• பாதுகப்புப்படையினர் மர்ம மனிதர்களை விட்டுவிட்டு பொதுமக்களை அடித்து படுகாயப்படுத்துவது மட்டுமன்றி சுட்டும் கொலைசெய்துள்ளனர்.
• மர்ம மனிதனின் நடவடிக்கைகளை நோக்குமிடத்து, ஒரு நிதானமான செயற்பாட்டினை கவனிக்கக்கூடியதாய் உள்ளது.
• அதாவது உயிர்பலி அல்லது பாரிய காயங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை. மாறாக ஒரு அச்சுறுத்தும் நடவடிக்கையாகவேகாணக்கூடியதாய் உள்ளது.
இருப்பினும் இவர்கள் தப்பிவிட முற்படும்போது உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை எம்மால் திடமாக உணரமுடிகிறது.
நடந்து முடிந்த மர்ம மனிதனின் அச்சுறுத்தல்களில் உள்ளூர் நபர்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கவேண்டும் ஏனெனில்,ஆண்கள் இல்லாத வீடுகள், ஊரின் பாதைகள் பிற ஊரவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் மூலம் இவ்வாறான கேள்விகள்தோன்றுகின்றன.
நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி அவசரகால சட்டங்களை நீடிப்பதற்காகவா?-
இதனை காரணம் காட்டி மூடப்பட்ட இராணுவ முகாம்களை மீண்டும் திறக்கவா?-
மக்களை குழப்பதிலாழ்த்தி மக்களின் மனநிலையை திசை திருப்புவதுடன் வெளி நாடுகளையும் தற்போதைய இலங்கை தொடர்பானநிலைப்பாட்டில் இருந்து திசை திருப்பவா?
இந்த கேள்விகளின் அடிப்படையை உற்று நோக்குவோம்.
யுத்த காலங்களில் பாதுகாப்புப்படையினர் அவர்களின் அடிப்படை சம்பளத்தைவிட இரட்டிப்பு, சில சமயம் மும்மடங்கு என கணிசமானவருமானம் பெறக்கூடியதாக இருந்தது மட்டுமல்லாமல் மேலதிக கொடுப்பனவுகள், தனித்துவமான மதிப்பு, மரியாதை என பல்வேறுஅம்சங்களில் உயர்நிலையில் இருந்தது நாம் எல்லோரும் அறிந்த விடயம்.
ஆனால் தற்போது இந்த நிலை தலைகீழாக மாற்றமடைந்து காணப்படுவதை நாம் அவதானிக்கின்றோம். தற்போது அடிப்படை மாதசம்பளத்தைவிட மேலதிக வருமானம் ஏதும் பாதுகப்புப்படையினருக்கு கிடைப்பதில்லை.
அதேபோல் முன்னர் கிடைக்கப்பெற்ற மதிப்பு, மரியாதைகளும் கிடைப்பதில்லை. எனவேதான் பாதுகாப்புப்படையினர் இவ்வாறானகலவரங்களை உண்டு பண்னுவதன் மூலம் நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி அவசரகால சட்டங்களை நீடித்து, மூடப்பட்டஇராணுவ முகாம்களை மீண்டும் திறப்பதற்கான ஒரு யுக்தியே இந்த மர்ம மனித நாடகம் என்பது ஏற்புடைய ஒரு காரணியாக எனதுசிந்தனையில் துலங்குகிறது.
எவ்வாறாயினும் மர்ம மனிதனின் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் அதிகளவில் பெண்களையே பாதித்திருப்பதால் பெண்கள் மிகவிழிப்புடனும் ஜாக்கிரதையாகவும் இருப்பது அவசியமாகும்.
இதனை முடிவுக்குக்கொண்டுவர அரசு உடனடி நடவடிக்கைகை மேற்கொள்ள வேண்டும்.